×

உத்தர பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் பாஜ.வுக்கு திடீர் தாவல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இம்மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜிதின் பிரசாத் நேற்று பாஜ.வில் திடீரென இணைந்தார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை சந்திக்க கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இம்முறை பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறுத்தப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.  இம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ஜிதின் பிரசாத், சமீப காலமாக காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், இவர் நேற்று பாஜ.வில் திடீரென இணைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அவர், அமைச்சர் பியூஷ் கோயல், பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலூனி முன்னிலையில் பாஜ.வில் சேர்ந்தார். ஏற்கனவே, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உட்கட்சி பூசலால் திணறி வரும் நிலையில், ஜிதின் பிரசாத் பாஜ.வில் இணைந்ததால் உபி தேர்தலை சந்திப்பதில் காங்கிரசுக்கு அடுத்த பேரிடி விழுந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில், ஸ்டீல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சாலை போக்குவரத்து மற்றும் கல்வித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். * தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழிஜிதின் பிரசாத்தின் தந்தை ஜிஜேந்திர பிரசாத்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து 1999ல் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர். சமீபத்தில், சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களில் அவரும் ஒருவர். இவர் கடந்த 2019ல் பாஜ.வில்  இணைய இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, ராகுல், பிரியங்கா  பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கட்சியில் தொடர்ந்து இருந்தார்….

The post உத்தர பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் பாஜ.வுக்கு திடீர் தாவல் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh Congress ,Senior President ,Jitin Prasad Baja ,New Delhi ,Uttar Pradesh ,Congress ,former ,minister ,Jitin ,
× RELATED காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி...